பள்ளி மாணவிகள் குழந்தை பெத்துகிட்டா 1 லட்சம் அரசே கொடுக்குதாம் எந்த நாட்டில் தெரியுமா?

Advertisements

ரஷிய நாட்டில் மக்கள் தொகையைப் பெருக்கும் வகையில் ரஷ்யாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு இருந்தது .  அந்த திட்டத்தில் பெரியவர்கள் மட்டுமே பயனடைந்து வந்த நிலையில் பள்ளி மாணவிகளுக்கும் 1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய மூன்று ஆண்டுகளில் நாளுக்கு நாள் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீதான மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷ்யா கடந்த இரண்டு நாட்களுக்கு நடத்தியுள்ளது. இதுவரை உக்ரைனுடனான போரில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வருவதால் ரஷ்ய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அந்த வகையில் பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று ரஷ்ய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ரஷ்யாவில் வளர்ச்சி விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.41 ஆக இருந்தது. இதற்கு முன்பு இந்த விகிதம் 2.05 ஆக இருந்தது.

இதற்கிடையே ரஷ்ய பொது கருத்து ஆராய்ச்சி மையம் கணக்கெடுப்பு நடத்தியிருந்தது. அதில் பதின் பருவத்தினர் கர்ப்பம் குறித்து கணக்கெடுப்புகளும் வெளியிடப்பட்டிருந்தது. இதில் புதிய கொள்கையை 43 சதவீதம் ஆதரித்துள்ளனர்.40 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையேயான இந்தப் போரில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பை ரஷ்ய அரசு வெளியிட்டுள்ளது.

அதவாது 10க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் மாணவிகள் கர்ப்பமடைந்தால் 1 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கருக்கலைப்புக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *