“ஊடகங்கள் எனக்கு எதிராகவே செயல்படுகின்றன” – டிரம்ப் விமர்சனம்!

ஈரான் போரில் தோல்வியடைந்து, அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் கூட, ஊடகங்கள் நமக்கு எதிராகப் போலிச் செய்திகளையே வெளியிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ட்ரூத் சோஷியல் தளத்தில், ஈரான் போரில் தோல்வியடைந்து, அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் கூட, ஊடகங்கள் நமக்கு எதிராகப் போலிச் செய்திகளையே வெளியிடும் என்று குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் மாபெரும் சக்திக்கும் வலிமைக்கும் முன்னால் ஈரான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டால் கூட, நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், சிஎன்என் போன்ற ஊடகங்கள், அமெரிக்காவை ஈரான் புத்திசாலித்தனமான முறையில் வென்றுவிட்டது என்றே தலைப்புச் செய்தி வெளியிடும் என்று தெரிவித்தார்.
மேலும், ஈரான் சரணடையும் நிகழ்வைக் கூட அமெரிக்கா அடைந்த தோல்வி என்று ஊடங்கள் தவறாகச் சித்தரித்துச் செய்தி வெளியிடும் என்று கூறினார். அவர்கள் தனது நிர்வாகத்திற்கு எதிராகச் செயல்படுவதோடு முற்றிலும் பைத்தியமாகிவிட்டனர் என்று விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *