அமீர் மகாலுக்குச் சென்று ஆற்காட்டு இளவரசரைச் சந்தித்த அண்ணாமலை!

சென்னையில் ஆற்காட்டு இளவரசரைப் பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசியுள்ளார். இது குறித்துத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், ஆற்காட்டு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியை அவரது 74ஆவது பிறந்த நாளையொட்டிச் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அமீர் மகாலுக்குச் சென்று சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ஆற்காட்டு இளவரசரின் திவான் நவாப்சாதா முகமது ஆசிப்பும் உடனிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார் ஆற்காட்டு இளவரசர் தன்னை வரவேற்றதும்,  விருந்தளித்துச் சிறப்பித்ததும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் நெடுங்காலம் வாழ்ந்து சமுதாயத்துக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வாழ்த்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *