துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்..!

Advertisements

இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தலில் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை அளித்தார்.

இந்திய நாட்டின் பதினாறாவது துணை ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

பல்வேறு நாடளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வாக்களிக்க வந்தனர். வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவர் இதில் போட்டியிடுகின்றனர்.

ஆளும் கட்சி ஆதரவு பெற்ற  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பிஜூ ஜனதா தளம் கட்சி,பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியும் தேர்தலை புறக்கணிக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *