
பல்வேறு மாவட்டங்களில் இருந்து திமுக, அதிமுக, மற்றும் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்கள் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் லாவண்யா, அவர் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளான செங்கோட்டையன், புஸ்லி ஆனந்த் ஆகியோரைச் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சந்தித்தனர்.இந்நிலையில்,இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் அவர்கள் அந்தக் கட்சியில் இணைந்தனர்.
இதனிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான ஐயப்பன் தவெகவில் இணைய உள்ளதாகக் கூறப்பட்டது. அவர் தான் தவெகவில் சேரவில்லை என்றும், சேரப்போவதாக வந்த தகவல் வதந்தி என்றும் விளக்கமளித்துள்ளார்.


