
தமிழக வெற்றிக் கழகத்தினர் தற்குறி அல்ல. அவர்கள் குறிவைத்து தாக்கும் அம்புக்குறி என்று சென்னையில் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பரவி வருகிறது. அதுகுறித்து விரைவில் விளக்கம் அளிக்கிறேன் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். அப்போது, நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என யோசித்தேன். நீங்கள் வாருங்கள் என அழைத்தது சந்தோஷமாக உள்ளது, ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். அதை விரைவில் அறிவிப்பேன் எனவும், என் ரசிகர்களாகிய உங்களை அழைத்து, என் தாயை மேடை ஏற்றி முக்கிய அறிவிப்பை விரைவில் தெரிவிக்க உள்ளேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஜோசப்விஜய் மீதுள்ள பொறாமை காரணமாகவே, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்கின்றன. வளர்ந்து வரும் த.வெ.க-வை பிடிக்காததால் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். கல்வி நிலையங்கள் மற்றும் கோவில்களுக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும், முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக பேசியதால் என்னையும் விமர்சிப்பார்கள் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தினர் தற்குறி அல்ல. அவர்கள் குறிவைத்து தாக்கும் அம்புக்குறி என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.



