“பெண் ஆடு” பலியிட்டு விடிய விடியக் கறி விருந்து!

Advertisements

Namakkal | Malayampatti | Goat Feast Festival

300 ஆட்டுக்கிடாய்களை வெட்டி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்ற விழா ஒன்று நாமக்கல்லில் நடந்து, பலரது கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறது...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ளது மலையாம்பட்டி கிராமம். இந்தப் பகுதியில் மலையாள தெய்வம் உள்ளது., வருடந்தோறும் இங்கு ஆடிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.கர்ப்பிணிகள்: இதற்கு ஒரு காரண கதையும் சொல்லப்படுகிறது… போத மலைப்பகுதியில் 250 வருடங்களுக்கு முன்பு, பொங்களாயி என்ற பெண் வாழ்ந்து வந்தாராம். கடந்த 200 வருடங்களுக்கு மேலாகவே இப்படியான திருவிழாவும், அதையொட்டிய விருந்தும் நடத்தப்படுவது வழக்கம். அவர், கர்ப்பிணியாக இருக்கும்போது, பிரசவத்திற்காகக் கீழே இறங்கி வந்தாராம்.

அப்போது பெண்கள் யாருமே அவருக்கு உதவி செய்யவில்லையாம். இதனால், இரட்டை குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதாம். உடனே, அந்தப் பொங்களாயி, இந்தப் பகுதி மக்களுக்குச் சாபம் தந்துவிட்டு மறைந்துவிட்டாராம். அதனால்தான், இந்தப் பகுதிகளில் பஞ்சம், பட்டினி ஏற்பட்டதாகவும், அதன் பிறகு இங்குள்ள ஆண்கள் மட்டும் ஒன்று சேர்ந்து, நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, இப்படியான விழாவைப் பொங்களாயிக்கு நடத்துவதாகவும் சொல்கிறார்கள்.

Namakkal | Malayampatti | Goat Feast Festival | Temple | Rasipuram

இப்படி விழா எடுத்தபிறகு, மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதாம். அதுமட்டுமல்ல, இப்படி நேர்த்திக்கடன் செலுத்துவதால், இதன் மூலம் நோய் நொடி நீங்குவதுடன், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. குடும்ப பிரச்சனைகள் தீருவதுடன், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால்தான், பெண்கள் பயன்படுத்தும் பொருளைக் கூட, இந்த விழாவில் ஆண்கள் பயன்படுத்துவதில்லையாம். அதேபோல, இந்தக் கோவில் பொருட்களைப் பெண்கள் தொடவும் மாட்டார்களாம். எந்த ஒரு காரணத்திற்காகவும், பெண்களும் இந்த விழா நடக்கும்போது அந்தப் பகுதிக்கு வரமாட்டார்களாம்.இந்தத் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளதால், ஆண்கள், குழந்தைகள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள்.

மலையாம்பட்டி கிராமம் போதமலை அடிவாரத்தில், ஆலமரத்தடியில் உள்ள மலையாள தெய்வம் பொங்களாயி அம்மனுக்கு இந்தத் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்துடன் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தர்மக்கர்த்தாக்கள் செய்வது வழக்கம். அந்தவகையில் கடந்த 21-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு, திருவிழா ஆரம்பமானது. அன்றுமுதல், பொங்களாயி அம்மனுக்கு, ஒவ்வொரு நாளும் மலர்களால் அலங்கரிக்கபட்டு, சிறப்புப் பூஜைகள் நடந்தன. நேற்றிரவும், சிறப்புப் பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.

இதையடுத்து தடபுடல் விருந்து ஆரம்பமானது. காளியம்மன்: இரவு 12 மணிக்குப் பெங்களாயி அம்மன்கோயில் வளாகத்தில் உள்ள காளியம்மன், இண்டங்காட்டு கருப்பசாமி போன்றவைகளுக்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்துப் பூஜை நடத்தப்பட்டது. அன்னதானத்துக்காக, வழங்கப்பட்ட 12 மூட்டைப் பச்சரிசியை கொண்டு பொங்கல் தயாரானது. இதற்குப் பிறகு, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், தங்கள் நேர்த்தி கடனைச் செலுத்துவதற்காக ஆடுகளைக் கொண்டு வந்து பலியிட்டனர். இந்தமுறை, முதன்முதலாக “பெண் ஆடு” பலியிடப்பட்டதாம். இதற்குப் பிறகுதான், ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிட்டுப் பூஜை நடந்துள்ளது. கிட்டத்தட்ட 300க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. தொடர்ந்து இரவு விருந்து சமையல் தயாரானது. பெரிய பெரிய பாத்திரங்களில் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டது. அந்த ஆட்டுக்கறியை பொங்கல் சாதத்துடன் சேர்த்து இன்று காலைப் பரிமாறப்பட்டது.

முதலில் மலை சாதி சமூகத்தைச் சேர்ந்த பூசாரிகள் பொங்கல் வைத்துப் பூஜை செய்தார். புதுப்பட்டி, ராசிபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10000-க்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் என அனைவருமே விழாவில் பங்கேற்றனர். அசைவ அன்னதானம்: மேலும், வடுகம், பட்டணம், புதுப்பட்டி, ராசிபுரம், புதுப்பாளையம், ஒடுவன்குறிச்சி, வடுகம் முனியப்பம்பாளையம், சீராப்பள்ளி, நாமகிரிபேட்டை, மெட்டாலா, ஆயில்பட்டி போன்ற பகுதிகளைச் சேர்ந்தோருக்கு அசைவ அன்னதானம் தரப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *