பிகாரின் அடுத்த முதல்வர் யார்..? நாளை வெளியாகும் முக்கிய முடிவு..!

Advertisements

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை அனைத்து நாடுகளும் உற்றுநோக்கின.பிஹாரில் ரகுல்கந்திக்கும் , மோடிக்கும் இடையேயான போட்டியில் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது . இதனிடையே வரலாறு காணாத அளவில் இண்டியா தோல்வி அடைந்தது . இந்நிலையில் , தற்போது பிகாரில் யார் முதலமைச்சராவார் என்ற கேள்வியும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்கள் என்ற பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் யார் என்பதற்கு தற்போது வரை சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

பாஜகவும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போடியிட்டாலும், 85 இடங்களை பெற்ற நிதிஷ் கட்சியை முந்தி, பாஜக 89 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால், இந்த முறை நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவியை பாஜக விட்டுக்கொடுக்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படாததே இந்த கேள்வி எழுப்பப்படுவதற்கு முக்கிய காரணம்.

இந்த சூழலில் பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெற்ற பின்னர், எக்ஸ் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்த நிதிஷ்குமார், இதுவரை பொதுவெளியில் தலைகாட்டாததும், அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விகளை வலுப்பெறச் செய்கிறது. இதனிடையே, பிகாரின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த கேள்விக்கு லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் முதலில் பதில் அளிக்காமல் சென்றார். ஆனால், பாட்னாவில் உள்ள இல்லத்தில் நிதிஷ்குமாரை சந்தித்த பிறகு பேட்டியளித்த சிராக் பஸ்வான், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராவார் என தான் நம்புவதாக கூறினார்.

முந்தைய தேர்தல்களில், பாஜக அதிக இடங்களை பெற்றிந்தபோதும், நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியதைப் போலவே இந்த முறையும் நடக்கும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியிடன் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த பரபரப்பான சூழலில், பிகார் தலைநகர் பாட்னாவில் நாளை தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், புதிய முதலமைச்சராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்படவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது எனினும், 10-ஆவது முறையாக நிதிஷ் குமார் பிகார் முதலமைச்சராவாரா அல்லது முதல் முறையாக பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராவாரா என்ற சஸ்பென்ஸ் நாளை உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *