113 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சி அமைக்க முடியுமா……? ஆளுநரைச் சந்தித்து விளக்கம் அளிக்கிறார் விஜய்….!

தமிழக வெற்றி கழகம் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை வென்றும், தற்போது ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

தற்போது உள்ள 113 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டு ஆட்சி அமைக்க முடியுமா என்பது குறித்தும், பெரும்பான்மை கிடைக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியுமா என்பது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

பதவியேற்ற பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கையில், ஆட்சி அமைப்பதற்கான அடுத்தகட்ட நகர்வுகளை தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

தற்போதைய சூழலில் வேறு எந்தெந்தக் கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பான விளக்கங்களைக் கேட்டறிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *