முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
மராட்டிய மாநிலம் நாக்பூரில், இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. இதில், சிறப்பாகவும், அதிரடியாகவும் விளையாடிய அபிஷேக் சர்மா 35 பந்தில் 84 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், தொடரில் 1-0 என கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

