ஆர்.பி. சவுத்ரி மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்…!

ஆர்.பி. சவுத்ரியின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மறைவையடுத்து, திரையுலகினர் ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தனது 100 ஆவது படத்தில் தான் நடிக்க வேண்டும்” என சவுத்ரி கேட்டுக் கொண்டதாக கூறினார்.

எளிய குணமும், தெளிவான சிந்தனையும் கொண்ட ஒரு மாமனிதரை திரையுலகம் இழந்துவிட்டது என்று கூறினார்.

ஆர்.பி. சவுத்ரியின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *