Elon Musk:AI தொழில்நுட்பத்தால் அச்சம்!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், X (ட்விட்டர்) இன் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமாகிய எலான் மஸ்க், தற்போது உலகை ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று (மே 23) பாரிஸில் நடந்த விவா டெக் ஸ்டார்ட் அப்நிகழ்ச்சியில் வெப்கேம் மூலம் பேசிய மஸ்க், செயற்கை நுண்ணறிவின் காரணமாக வருங்காலங்களில் நம்மில் யாருக்கும் வேலை இருக்காது என்றும் ஏஐ தொழில்நுட்பமே தனது மிகப்பெரிய பயம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொழுதுபோக்குக்காக வேண்டுமானால் ஏதெனும் ஒரு வேலையை நாம் செய்யலாம். மற்றபடி உங்களுக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் ஏஐ தொழில்நுட்பமே ரோபோக்கள் தயாரித்து வழங்கிவிடும். பொருட்கள் மற்றும் சேவைகளுக்குப் பற்றாக்குறை இருக்காது. கடந்த சில ஆண்டுகளாக ஏஐ தொழில்நுட்பத்தின் திறன்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.

கணினி மற்றும் ரோபோக்கள் உங்களைவிட எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய முடிந்தால், உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா? என்று கேள்வியெழுப்பிய அவர், சமூக ஊடகங்கள், மனித மூளையில் சுரக்கும் டோபோமைனை AI மூலம் அதிகப்படுத்தும் யுக்தியை கையாளத் தொடங்கியுள்ளன என்றும் இதிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க அவர்கள் அதிக நேரம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். கடந்த காலங்களிலும் ஏஐ தொழில்நுட்பம்குறித்து எலான் மஸ்க் அச்சம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *