விஜய்க்கு அளிக்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு அதிரடி மாற்றம்….!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன.

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இதனால், அவர் சென்னை, பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து கான்வாய் வாகனங்கள் எதுவுமின்றி நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்குப் புறப்பட்டார்.

இந்த, நான்கு கான்வாய் வாகனங்களும் தலைமை செயலகம் நோக்கி புறப்பட்ட நிலையில், காவல்துறையினர் மட்டுமே விஜய்யுடன் இருந்தனர்.

மேலும், விஜய் தானாகவே முன்வந்து கான்வாய் வாகனங்களை திருப்பி அனுப்பியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *