விஜய்க்கு அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து..!

Advertisements

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருகின்றது. இதில் விடியற்காலையிலேயே ஏராளமானத் தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளனர்.

இந்நிலையில் தவெக மாநாடு வெற்றிப் பெற தவெகத் தலைவர் விஜய்க்கு அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்து செய்தியில், திரையில் உன்னைப் பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியல் வெற்றிக்குத் துணை நிற்பார்கள் என்றும். தேர்தலில் உன் இமாலய வெற்றிப் பெற்று நீ அரியணை ஏறும் நாள் வரும் என்றும். அது உன் தொண்டர்களின் திருநாள் என்றும். நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு என்றும். உன்னோடு வரும் தொண்டர் படை இந்நாட்டில் வேறு யாருக்கும் இல்லை என்றும். உன் வெற்றிக்கு வானமே எல்லை என வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *