Advertisements

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் ரகுமான் கானின் நூல்களை வெளியிட்டுள்ளார்.
சென்னை அண்ணா சாலையில், முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் எழுதிய ஐந்து நூல்களை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இதில், ரகுமான் கானின் பேச்சுக்கும் எழுத்துக்கும் நான் ரசிகன் என்றும் தொகுதி மக்கள் மத்தியில் ரகுமான் கானுக்கு மிகுந்த அன்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இவரை அ.தி.மு.க.வுக்கு வரச்சொல்லி எம்.ஜி.ஆர். அழைத்தபோதும் அவர் செல்லவில்லை என்று கூறினார். பின்னர், ரகுமான் கான் மீது வெடிபொருள் வீசப்பட்ட போதிலும் அவர் அஞ்சவில்லை. மாநாடுகளில் ரகுமான் கான் பேச எழுந்தாலே கூட்டம் ஆர்ப்பரித்து விடும் என்றும் அவரை புகழ்ந்தார்.
இதனை தொடர்ந்து, . இன்றைக்கும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ரகுமான் கான் என்று முதல்வர் தெரிவித்தார்.
Advertisements



