ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை : நேரடியாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி..!

Advertisements

மாற்றம் கொண்டு வருவோம் என்று சொன்ன தவெக ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லாமல் விவசாயிகளின் நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றன என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் அரசின் திறந்தவெளி கிடங்குகளில் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து முளையிட்டு வீணாவது தொடர்கதையாகி உள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வேளாண் பெருமக்களால் கொண்டுவரப்பட்ட நெல் மணிகள், எப்படி வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வீணானதோ, அதேபோல் மாற்றம் கொண்டு வருவோம் என்று சொன்ன தற்போதைய த.வெ.க. ஆட்சியிலும், எந்த மாற்றமும் இல்லாமல் நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றன என்று குற்றம் சாட்டினார்.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களிலும் குடோன்கள் அமைக்க உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *