பாராளுமன்றத்தில் கடைசி நாளிலும் எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைப்பு நடைபெற்றுள்ளது.
பீகார் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் உள்ளிட்டப் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வாதாடினர். தொடர்ந்து அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.
தொடர்ந்து பீகார் வாக்காளர் திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவைக் கூடிய ஒரு நிமிடத்திலேயே அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

