
அமெரிக்கா-ஈரான் இடையிலான பிரச்சினைகளைத் தன்னால் மிக விரைவாகத் தீர்க்க முடியும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், நான் என்ன செய்யப் போகிறேன் என்று உங்களிடம் சொல்லப் போவதில்லை. ஆனால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பெஞ்சமின் நெதன்யாகு உடனான பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளையும் தன்னால் மிக விரைவாகத் தீர்க்க முடியும் என்று கூறினார்.



