
புதுச்சேரி முதலமைச்சரைப் பார்த்து தமிழக முதலமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் உப்பளம் மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசியபோது, புதுச்சேரி மக்களுக்கு வணக்கத்தை தெரிவித்தார்.
இதன் பிறகு நாம் வேறு வேறு கிடையாது எல்லோரும் சொந்தம்தான் என்றார். தமிழக அரசு போல் புதுச்சேரி அரசு கிடையாது என்றும் நல்ல பாதுகாப்பு கொடுத்துள்ள புதுச்சேரி முதலமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய விஜய், புதுச்சேரி அரசைப் பார்த்து தமிழக முதலமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வரும் தேர்தலில் 100 சதவீதம் கற்றுக்கொள்வார் என்று கூறினார்.
இதை தொடர்ந்து, புதுச்சேரிக்கு மாநில அரசாக மாற்ற தீர்மானம் அனுப்பினாலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பறக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.



