#BREAKING: தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி!!

Advertisements

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போலக் காலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மருந்து உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து அடுத்தடுத்த கட்டிடங்களில் பரவியதை அடுத்து மூன்று கட்டடம் இடிந்து தரைமட்டமாகின.

இந்த விபத்தில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா என்று மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *