Advertisements

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரனை நியமித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்பொழுது மீண்டும் அண்ணாமலைக்கு மிகப்பெரிய ஆதரவு கரம் நீட்டி இருப்பதுடன் விரைவிலேயே அண்ணாமலைக்கு மிகப்பெரிய பதவி தருவதற்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்கிறது டெல்லி அரசியல் வட்டாரம் .
அதிமுக ஒருங்கிணைப்பு குழு தலைவர் பன்னீர்செல்வமும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் சமீபத்தில் டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு தமிழக அதிமுக கூட்டணியில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட தொடங்கி இருக்கிறது .
ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவுடன் ஒருங்கிணைக்கும் முயற்சியுடன் அண்ணாமலையை வைத்து டெல்லி பாஜக வேறு பல திட்டங்களையும் கையில் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
இதில் முக்கியமான திருப்புமுனை என்னவென்றால் ஓ பன்னீர்செல்வம், அண்ணாமலை ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதே நேரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியும் டெல்லியில் இருந்து பல்வேறு பின்னணி வேலைகளை செய்து இருக்கிறார் என்பதுதான் . இந்த சந்திப்பு அலை அடங்குவதற்குள் கோவை திருமண விழாவில் ஓ பன்னீர்செல்வமும் அண்ணாமலையும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது மற்றும் ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்தி சில நிமிடங்கள் உரையாடியது ஆகியவையும் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகின்றன .
அண்ணாமலையை பொருத்தவரையில் தனக்கு முக்கிய பதவி தரப்படாததால் கட்சியை விட்டு விலகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார் ஆனால் தற்போதைய டெல்லி சந்திப்புகள் அவரிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது . வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை முக்கிய பங்கு வைப்பார் என டெல்லி பாஜக வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலையை தேசிய அளவில் உயர்ந்த பதவிக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் நடக்கிறது என்கிறார்கள் .
தற்பொழுது அண்ணாமலையை உள்துறை அமைச்சர் அமித்ஷா மிகவும் நம்புகிறார் . அவரது செயல்பாடுகள் வருகிற தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பேசி வருகிறார் . இந்த சூழ்நிலையில் அதிமுகவை ஒரே அணியாக கொண்டு வரவும் அமித்க்ஷா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் . இது மட்டுமல்லாமல் டிடிவி தினகரனையும் , அதிமுக பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரவும் அவர் திரை மறைவில் பல பணிகளை செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது .
தற்பொழுது உள்துறை அமைச்சர் அமித்ஷா தனக்கு ஆதரவு கரம் நீட்டுவதாலும் உரிய பதவி தனக்கு தேடி வர இருப்பதாலும் அண்ணாமலை மிக உற்சாகமாக இருக்கிறார் . எனவே கடந்த காலங்களில் தீவிர பணியாற்றிய அண்ணாமலை மீண்டும் விஸ்வரூபம் எடுப்பார் என தெரிகிறது .
இதற்கிடையே , தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வெளிப்படையாக சவால் விட்டு இருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார் . ஸ்டாலினுக்கு எதிராக அமித்ஷா பேசிய பேச்சு தற்போது இந்திய அளவில் மிகப்பெரிய பேசும் பொருளாக மாறி இருக்கிறது . மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தில் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று விளையாட்டு வளாகங்கள் உட்பட பல திட்டங்களை தொடங்கி அடிக்கல் நாட்டினார். அப்பொழுது அவர் பேசும் போது மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் என்டிஏ கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும் வாக்காளர்கள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகளை நிராகரித்து விட்டார்கள் என்றும் பேசியிருக்கிறார் .
இது மட்டுமல்லாமல் அவர் மேலும் பேசும்போது, பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருக்கிறது , இதேபோல, அடுத்த ஆண்டு மேற்கு வங்காளம் தமிழ்நாட்டிலும் என் டி ஏ கூட்டணி வலுவான வெற்றியைப் பெறும் மம்தா பானர்ஜி மற்றும் மு க ஸ்டாலின் போன்றவர்கள் தயாராக இருக்க வேண்டும். பீகாரருக்கு பிறகு மேற்குவங்கம் தமிழ்நாட்டில் என் டி ஏ விவின் நேரம் இது என்று அமித்ஷா வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் .
அவரது இந்த பேச்சு இந்திய அரசியல் வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது . தமிழகத்தில் அண்ணாமலை ரீ என்ட்ரி கொடுக்கும் வகையிலும் மு க ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயல்பாடுகள் தமிழக பாஜக மட்டுமல்லாது அதிமுகவினரையும் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements



