Kerala Landslide:கேரளாவில் மீண்டும் ஒரு நிலச்சரிவு..மக்கள் பீதி!

கேரளா மாநிலத்தின் மூனாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாகப் பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்தபோது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அம்சபாவிதம் தவிர்க்கப்பட்டது.

முன்னதாகக் கடந்த 30 ஆம் தேதி கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு காரணமாக 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் மீட்பு பணிகள் கூட முழுமை பெறாத நிலையில், மீண்டும் கேரளா மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *