டிரம்ப்பின் இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலாக உள்ளது – கொலம்பிய அதிபர் பேச்சு.!

இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளது உண்மையிலேயே அச்சுறுத்தலாக உள்ளது என்று கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்தியச் செயலால், அது உலகில் தனிமைப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஏகாதிபத்திய நடவடிக்கையின் ஒருபகுதியாக வெனிசுலாவில் அமெரிக்கப் படையினர் புகுந்து அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைபிடித்து நியூயார்க் நகருக்குக் கொண்டு சென்று சிறை வைத்துள்ளனர்.

இதேபோல் கிரீன்லாந்தையும் கைப்பற்ற விரும்புவதாக டிரம்ப் கூறியுள்ளதற்கு டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்துக் கொலம்பியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ, இது உண்மையான அச்சுறுத்தலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். உலகின் மீது அமெரிக்க ஆதிக்கம் செலுத்த விரும்புவதால், அது உலகில் தனிமைப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *