பூமிக்கு அருகே வரப்போகும் வியாழன்..வெறும் கண்களால் பார்க்கலாம்.!

வானியல் ஒரு அரிய நிகழ்வாக சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன், பூமிக்கு அருகே வருகிறது. நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன் கோள் ஆகும். இது தான் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும்.

நமது பூமியை போல 1,300 பூமியை வியாழனில் அடக்கிவிடலாம் . இந்த வியாழன் கோளை 75 க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றிவருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதற்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 63.3 கோடி கிலோ மீட்டர் ஆகும். இந்த கோளின் நகர்வை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து நாசா விஞ்நானிகள் கூறுகையில், “வியாழன் கோளானது பூமியை நோக்கி நெருங்கி வருவது தெரிய வந்துள்ளது என்றும் இன்று அதனை வெறும் கண்களால் கூட பார்க்க முடியும் என்றும தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்கள் சூரியன் மறைந்த பிறகு கிழக்கு திசையில் ஜெமினி விண்மீன் கூட்டத்துக்கு அருகில் இந்த கோளை காணலாம் என்றும் அதேபோல் நாளை சூரியன், வியாழன், பூமி ஆகிய 3கோள்களும் ஒரே நேர்கோட்டில் காணப்படும்” என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *