vijay honours students:நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – நடிகர் விஜய் ஆவேசம்!

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை என்று நடிகர் விஜய் பேசியுள்ளார்.

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாவது கட்டம் இன்று நடந்து வருகிறது.

நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளைக் கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் சத்தியமான உண்மை. நீட்டைப் பொறுத்தவரை 3 பிரச்சினைகளாக நான் பார்ப்பது.நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானது. 1975ம் ஆண்டுக்கு முன்பு கல்வி மாநிலப்பட்டியலில் இருந்தது, அதன்பின்பே, ஒன்றிய அரசு வந்தபிறகு பொதுப்பட்டியலில் சேர்த்தார்கள். அதுதான் முதல் பிரச்சினையாகத் தொடங்கியது. 2வதாக ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு. இது கல்வித்தரத்திற்கான நோக்கத்திற்கு எதிரானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *