Payne Dies:பிரபல பாடகர் மாடியிலிருந்து தவறி விழுந்து மரணம்…ரசிகர்கள் அதிர்ச்சி !

Advertisements

பியூனஸ் ஐரிஸ்: பிரபல பாடகர் லியம் பெய்ன் (வயது 31) அர்ஜெண்டினாவில் 3வது மாடி பால்கனியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலக அளவில் இசைக்குழுக்கள் ஏராளம் உள்ளன. ஆனால் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. இந்தச் சூழலில் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு கொண்ட ஒன் டைரக்ஷன் எனப்படும் பாப் இசைக்குழு மிகவும் பிரபலமானது. இவர்களை 1டி என்று ரசிகர்கள் சுருக்கமாக அழைப்பார்கள்.

லியம் பெய்ன், ஹாரிஸ் ஸ்டைல்ஸ், ஜெய்ன், லூயிஸ், நியால் ஹாரன் என 5 பேர் கொண்ட இந்தக் குழுவில், முக்கிய நபராகத் திகழ்ந்தவர் பாடகர் லியம் பெய்ன். இவருக்கு வயது 31. இவர் தற்போது ஒன் டைரக்ஷன் குழுவிலிருந்து விலகிவிட்டார். ஆனாலும் ரசிகர்கள் மனதில் இவருக்கு என்றும் இடம் உண்டு.

இவர் கடந்த செப்டம்பர் 30ம் தேதி அர்ஜெண்டினாவிற்கு தனது காதலி கேத் கேசிடியுடன் சுற்றுலா சென்றுள்ளார். அவரது காதலி கடந்த அக்., 14ம் தேதி அர்ஜெண்டினாவிலிருந்து புறப்பட்டு வந்துவட்டார். அவர் அர்ஜெண்டினாவில் உள்ள பியூனஸ் ஐரிஸ் நகரத்தில் உள்ள காசாசுர் பலேர்மோ ஹோட்டலில் 3வது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில், பாடகர் லியம் பெய்ன் 3வது மாடி பால்கனியிலிருந்து தவறி கீழே விழுந்தார். அவர் பலத்த காயமுற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இளம் பாடகர் லியம் பெய்ன் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. லியம் பெய்னின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது விபத்தா? திட்டமிட்டு நடைபெற்றதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *