
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மின்சார வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலையை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், குமாரசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள ஆலைகளில் லாரிகள், பேருந்துகள், சிறிய சரக்கு வாகனங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வரும் இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் மின்சார வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலையை அமைத்துள்ளது.
இந்த ஆலையின் திறப்பு விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கனரகத் தொழில்துறை அமைச்சர் குமாரசாமி, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், குமாரசாமி ஆகியோர் மின்சார வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலையைத் திறந்து வைத்தனர். இந்த விழாவில் அசோக் லேலண்ட், இந்துஜா குழுமம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டு ஆலையைத் திறந்து வைத்ததுடன், முதல் மின்சார வாகனத்தைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர்.




