ஈரான் மற்றும் இஸ்ரேல் போரில் தீவிரமடைந்ததை தொடர்ந்து, 311 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்ததை தொடர்ந்து, 311 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 11வது நாளான போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் தலையீட்டால் போர் இன்னும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரான் சென்று கல்வி பயின்ற மாணவர்கள், அந்நாட்டில் வசித்தவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஏராளமான இந்தியர்கள் விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், ஈரானின் மாஸ்ஸாத் நகரிலிருந்து 311 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் நேற்று மாலை  4.30 மணியளவில் தில்லியை வந்தடைந்தது.

மேலும் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *