அரசு கல்லூரியில், வேலை வழங்க வேண்டும் என்று வேண்டு கோள் – திருங்கை டாக்டர் ஜென்சி

முதல்வரின் வாழ்த்து பெற்ற திருங்கையான டாக்டர் ஜென்சி, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து, தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு அரசு கல்லூரியில், வேலை வழங்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள  தனியார்  கல்லூரியில் ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கையான ஜென்சி அக்கல்லூரியில், ஆங்கில உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்! தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்!” என்று பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து முதல்வரின் வாழ்த்து குறித்து பேசிய டாக்டர் ஜென்சி, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து, தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு அரசு கல்லூரியில் , பணி நிரந்தரம் செய்து வேலை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *