அதிபா் டிரம்ப் தெளிவான பதில்களை அளிக்க வேண்டும் என எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

Advertisements

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெளிவான பதில்களை அளிக்க வேண்டும் என எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் அமெரிக்க நாடாளுமன்ற மேலவைத் தலைவா் சக் ஷுமா், ‘ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

இதனால், வெளிநாடுகளில் அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை டிரம்ப் முன்னேடுக்கும் திறனை கட்டுப்படுத்தும் போா் அதிகாரங்கள் தொடர்பான சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா்களின் பாதுகாப்பு கருதி, ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து அமெரிக்க மக்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்கு தெளிவான பதில்களை அதிபா் டிரம்ப் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அமெரிக்கா்களின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளக்கூடிய இந்தத் தாக்குதல் குறித்து டிரம்ப்  பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *