ஈரான் அரசு அதிரடி மசோதா..!

ஹார்முஸ் நீரிணை வழியாகக் கடந்து செல்லும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈரான் அரசு வெளிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் நீரிணை வழியாகக் கடந்து செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் வகையில், புதிய சட்ட மசோதாவை ஈரான் தயாரித்துள்ளது.
இந்த, மசோதா ஈரான் நாடாளுமன்றத்தில் விரைவில் இயற்றப்படும். மேலும், ஒரு நாட்டின் வழியாகப் பொருட்கள் கடந்து செல்லும்போது கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றிலும் இயல்பானதே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *