மஸ்க்-க்கு ஆதரவாக அமெரிக்க மக்கள் மொத்தத்தில் அடிவாங்கிய டிரம்ப்..! புதிய கட்சி தொடங்கும் மஸ்க்..!

Advertisements

டிரம்ப் உடன் ஏற்பட்ட மோதலையடுத்து எலான் மஸ்க் தனி கட்சி தொடங்கும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்பை ஆதரித்து எலான் மஸ்க் பிரச்சாரம் செய்து வந்ததோடு, பல கோடிகளை நன்கொடையாக வாரி வழங்கினார். இந்நிலையில், டிரம்பின் பட்ஜெட் மசோதாவால் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்த எலான் மஸ்க், DOGE துரையின் பதவிக்காலம் முடிவடைந்ததாக கூறி அதில் இருந்து விலகினார்.தற்போது, இருவருக்குமிடையேயான மோதல் அதிகரித்துள்ளது.

அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள ‘பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்’ காரணமாக, அவருக்கும் நண்பரும் பெரும் கோடீஸ்வரருமான எலான் மஸ்க்கிற்கும் மோதல் வெடித்தது. எக்ஸ் வலைதளத்தில் மஸ்க்கும், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்பும் மாறி மாறி வசைபாடினர். அப்போது, இதனிடையே டிரம்ப் மற்றும் மஸ்க் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் டிமிட்ரி மெட்வதேவ் கூறியுள்ளார். இதற்கான ஊதியத்தை ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் பங்குகளாகப் பெற்றுக்கொள்வதாகவும் மெட்வதேவ் தெரிவித்துள்ளார். மெட்வதேவின் மத்தியஸ்த திட்டத்திற்குச் சிரிக்கும் எமோஜியைப் பதிலாக எலோன் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

இப்படியான சூழலில், மஸ்க் நேற்று காலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அமெரிக்காவில் “நடுத்தர 80% மக்களை” உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவையா? இதை ஒரு கருத்துக்கணிப்பாக (poll) பதிவு போட்டார். அந்த பதிவை பார்த்த இந்த கருத்துக்கணிப்பில் 80% பேர் “ஆமாம், புதிய கட்சி தேவை”னு வாக்கு அளித்தார்கள். பிறகு இதைப் பார்த்து மஸ்க், “மக்கள் தங்கள் கருத்தை சொல்லிட்டாங்க! நடுத்தர 80% மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புது கட்சி வேண்டும் என கூறினார்.

அதற்கு, “வேண்டும்” என 80 சதவிகிதம் பேர் பதில் அளித்ததாக மஸ்க் பதிவிட்டார். புதிய கட்சிக்கு The American Party எனப் பெயர் வைக்கப்படும் என்றும் மஸ்க் பதிவிட்டார்.இந்நிலையில், மஸ்க் கடுமையாக எதிர்த்த ‘பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்’-லை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். புத்தியை இழந்துவிட்ட மஸ்க் உடன் இனி எப்போதும் பேசப் போவதில்லை என டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *