சென்னை உட்பட 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு..!

Advertisements

தமிழ்நாட்டில் சில நாட்கள் கேப் விட்டிருந்த மழை, மீண்டும் இப்போது ஆரம்பித்துவிட்டது. கடந்த ஒரு சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, புறநகர் உட்பட மாநிலம் முழுக்க 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.தமிழ்நாட்டில் இந்தாண்டு மே மாதம் நல்ல மழை பெய்தது. சென்னை தொடங்கி மாநிலம் முழுக்க பரவலாகவே மழை பெய்தது. தொடர்ந்து பருவமழையும் ஆரம்பித்துவிட்டது. இடையில் சில நாட்கள் மழை குறைந்த நிலையில், வெப்பம் மெல்ல அதிகரித்தது. இதற்கிடையே இப்போது மீண்டும் மாநிலத்தில் மழை ஆரம்பித்துவிட்டது.

கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் மீண்டும் குறைய ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.மாலை 6 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், அதாவது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூரிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், தஞ்சையில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, தேனி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை இந்த 21 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் வெப்பம் குறையும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும், கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், தஞ்சையில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, தேனி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை இந்த 21 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் வெப்பம் குறையும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் தமிழகத்தில் வரும் ஜூன் 10 முதல் 12 வரையிலான நாட்களில் நல்ல மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “வரும் ஜூன் 10ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 11ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *