திமுக தலைமை குறித்த அமைச்சரின் சவாலான பேச்சு.! வெ*டித்த சர்ச்சை..!

தி.மு.க.வை வழிநடத்த உதயநிதிக்கு தகுதி இருக்கா அல்லது மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா என வாக்கெடுப்பு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று திருச்சியில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு சட்டக் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா இன்று ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பின்னர், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தி;த்து பேசினார். அப்போது, நீட் தேர்வி;ற்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தேவையில்லாமல், ஜென்சி டி.எம்.கே. அமைப்பினர் பங்கேற்று, ரூபாய் 300 கொடுத்து போராட்டக்காரர்களை உட்கார வைத்துள்ளனர் என்றும், ஜென்சி என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் டி.எம்.கே. செயல்படுகிறது என்றும், ஜென்சி என்றால் என்ன என்று தெரியாமல் உதயநிதி தப்பாக வழி நடத்துகிறார் என்றும், ஜென்சி என்றால் என்ன என்பதை உதயநிதிக்கு முதலில் கற்றுத் தர வேண்டும் எனவும். தி.மு.க.வினர் எதுவும் புரியாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஜென்சி டி.எம்.கே. என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பொதுவெளியில் கோமாளித்தனம் செய்ய வேண்டாம் என்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *