அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது 90 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆதரவாளர்கள் இடையே பேசிய இரு உரைகளின் பகுதிகளை தவறாக ஒளிபரப்பியதற்காக பிரிட்டனைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதில், அவதுாறு ஏற்படுத்தியதற்காக, 45 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் புளோரிடா வர்த்தக விதிகளை மீறியதற்காக 45 ஆயிரம் கோடி ரூபாய் என மொத்தம் 90 ஆயிரம் கோடி ரூபாய் அதிபர் டிரம்ப் சார்பில் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, தவறான எடிட்டிங் என்று ஒப்புக்கொண்டு இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மன்னிப்பு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதால், சட்டப்படி இதை எதிர்கொள்வோம் எனவும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


