‘சிக்மா’ இசை வெளியீட்டு விழா – அப்பா விஜய்க்கு நன்றி தெரிவித்த ஜேசன் சஞ்சய்!

நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் சுதீப் கிஷன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். எஸ். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், சென்னையில் ‘சிக்மா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது தாயாருக்கும், தந்தை விஜய்க்கும், தங்கை திவ்யா சாஷாவுக்கும் நன்றி தெரிவித்தார்.

அப்போது, “என்னோட அம்மாவுக்கு நன்றி… என்னோட அப்பா இன்னைக்கு முதலமைச்சர். அவருக்கு நன்றி… என்னோட தங்கை திவ்யா, அவளுக்கும் ரொம்ப நன்றி” என்று ஜேசன் சஞ்சய் தெரிவித்தார்.

அவர் தனது தந்தை விஜய்க்கு நன்றி தெரிவித்தபோது, அரங்கில் இருந்த ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆரவாரம் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *