மாணவா் உயிரிழந்த சம்பவம்;கண்டனம் தெரிவித்த..?

Advertisements

அரசுப் பள்ளி சுவா் இடிந்து மாணவா் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், திருவள்ளூா் மாவட்டம், கொண்டாபுரம் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தப் போது, கைப்பிடி சுவா் இடிந்து விழுந்ததில், உயிரிழந்தச் செய்தி மிகுந்த அதிா்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்தார். மேலும், அவர் திமுக கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார். தொடர்ந்து, உயிரிழந்த மாணவன் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு பொம்மை முதல்வரின் விடியா திமுக அரசை வலியுறுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *