நான்காவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி…!

இந்தியா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவிற்குத், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இந்த, தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும், மூன்றாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று, 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது இருபது ஓவர் போட்டி உத்தரபிரதேசத்தின்  லக்னோவில் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, இன்றையப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டு தொடரை சமன் செய்ய தீவிரம் காட்டும் என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *