ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஹராரேவில், ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது. இதில், அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 112 ரன்களும், கூப்பர் கானொலி 78 ரன்களும், மிட்செல் மார்ஷ் 53 ரன்களும் எடுத்து அசத்தினர்.
இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 48 ஓவர்களில் 272 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *