சென்னை உட்பட 19 மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகத் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *