கிரீன்லாந்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் அமெரிக்கா நிரந்தரமாக கவனித்துக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியல் வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்கா மற்றும் கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரு தரப்பு பிரதிநிதிகளுடன் பேசி மிக முக்கியமான உடன்பாட்டை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தின்படி, கிரீன்லாந்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் அமெரிக்கா நிரந்தரமாக கவனித்துக் கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அமெரிக்க அரசுக்கு ஒரு பைசா கூட செலவு கிடையாது என்று கூறியுள்ளார். இனிமேல் அமெரிக்காவின் நேரடி எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, எந்த ஒரு எதிரி நாடும் கிரீன்லாந்தில் ராணுவ தளம் அமைக்கவோ, படைகளை நிறுத்தவோ அல்லது அங்குள்ள முக்கிய துறைகளில் முதலீடு செய்யவோ கனவிலும் நினைக்க முடியாது என்று எச்சரித்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்குக் காலக்கெடு எதுவும் கிடையாது என்றும், இது ஒரு நிரந்தர ஒப்பந்தம் என்றும் தெரிவித்துள்ளார். இதன்படி, கிரீன்லாந்தின் பொருத்தமான பகுதிகளில் அமெரிக்காவின் பிரம்மாண்டமான ராணுவ தளங்களை அமைக்கும் பணிகள் உடனடியாக துவங்கப்படும் என்று கூறியுள்ளார்.

