Trisha Krishnan: விளக்கம் கேட்டு காவல்துறை கடிதம்!

Advertisements

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் விவகாரம் தொடர்பாக நடிகை திரிஷாவுக்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். இதற்கு நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில், “மன்சூர் அலிகான் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு” என்று காட்டமாக பதிலளித்தார். மன்சூர் அலிகான் பேச்சுக்கு பல நடிகர்களும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு, நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ட்வீட் பதிவிட்ட த்ரிஷா தவறு செய்வது மனித இயல்பு; மன்னிப்பது கடவுள் குணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனிடையே, நடிகர் மன்சூர் அலிகான், “நான் மன்னிப்பு கேட்கவில்லை. தொலைபேசியில் மரணித்துவிடு என்று சொன்னதை மன்னித்து விடு என்று மக்கள் தொடர்பாளர் தவறாக புரிந்து கொண்டார்” என கூறியிருந்தார். மேலும், இது குறித்து பேட்டியில், “தப்பே செய்யாத நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த வீடியோவை முழுசா ஒருமுறை பாருங்க, அதுல நான் தப்பா பேசி இருந்தா என்னை நடுரோட்டில் நிற்கவைத்து கல்லால் அடிங்க என்று தெரிவித்திருந்தார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், திரிஷா குறித்து நடிகர் மன்சூர்அலிகான் ஆபாசமாக கருத்து தெரிவித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு நடிகை திரிஷாவுக்கு ஆயிரம் விளக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே நடிகர் மன்சூர் அலிகானிடமும் ஆயிரம் விளக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தியிருந்தனர். மன்சூர் அலிகானை தொடர்ந்து நடிகை திரிஷாவிடமும் காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது. எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க நடிகை திரிஷாவிற்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *