Train Movie: பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்!

Advertisements

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் (Train) படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது.

பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திரு. முரளி ராமசாமி, திரு ராதாகிருஷ்ணன், S கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன் , கல்யாணம் (Knack Studios) ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் விஜய் சேதுபதி திரையுலகில் கால் பதித்த ஆரம்ப காலக்கட்டத்திலேயே தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்தி மக்கள் மனத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இவர் நடித்த பீட்சா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.  ஹூரோவாக மட்டும் அல்லாமல் மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் மனம் கவர்ந்த வில்லனாகவும் மாஸ் காட்டினார் விஜய் சேதுபதி.

7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிப்பில்,  ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில்,  இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில், ஆக்சன் காமெடி கமர்சியல் படமாக உருவாக்கப்பட்டு வரும் விஜய் சேதுபதியின் 51 படத்தின்  படப்பிடிப்பு,  மலேசியாவில் முழுமையாக அண்மையில் நிறைவடைந்துள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள ட்ரெயின் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *