
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை… 16 வயதிலேயே முதலமைச்சர் மகனுடன் ஏற்பட்ட காதல்.. பிரபலமாக இருக்கும் போதே சினிமாவை விட்டு விலகிய நடிகை.
தனது 16 வயதில் ‘துஜே மேரி கசம்’ என்ற படத்தில் பாலிவுட் பிரபல நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கு ஜோடியாக நடித்தார் ஜெனிலியா. மகாராஷ்டிர முதலமைச்சரின் மகன் என்பதால் மிகவும் திமிர் பிடித்தவராக இருப்பார் என்று ஜெனிலியா நினைத்திருக்க, அதற்கு எதிர்மாறாக இருந்துள்ளார் ரித்தேஷ்.
ரித்தேஷ், ஜெனிலியா இருவருக்கும் ‘துஜே மேரி கசம்’ படப்பிடிப்பிலேயே காதல் மலர்ந்தது. 9 வருட காதலுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார் ஜெனிலியா. ரித்தேஷ், ஜெனிலியா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 10 வருடத்திற்கும் மேல் சினிமாவை விட்டு விலகிக் குடும்பம், குழந்தைகளைக் கவனித்து வந்த ஜெனிலியா, 10 வருடத்திற்கு பிறகு தனது கணவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீஎண்ட்ரி கொடுத்தார்.

நீண்டஇடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிகை ஜெனிலியாவை திரையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்று விட்டனர். ரித்தேஷ், ஜெனிலியா இருவருமே பாலிவுட்டின் மிகவும் பிரபலமான தம்பதிகளில் ஒருவர்.
பொது நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா என எந்த நிகழ்ச்சியானலும் இருவரும் சேர்ந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டவர்கள். அதுமட்டுமில்லாமல் காதல் பொங்க இருவரும் ஒன்றாகச் செய்யும் ரீல்ஸ்கள் பலமுறை இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இருவருக்கும் திருமணம் முடிந்து 12 வருடத்தைக் கடந்த போதிலும், இன்றும் காதல் மங்காது, அதே காதலுடன் இருவரும் இருந்து வருவது பாலிவுட்டில் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது, மேலும் இந்த ஜோடிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் தம்பதிகளுக்கு டப் கொடுக்கும் இந்த எவர்க்ரீன் காதல் தம்பதி இருவரும் மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். இறந்த பிறகு தங்களது உறுப்புகளைத் தானம் செய்ய இருவருமே முடிவு செய்துள்ளனர்.
‘நமக்குப் பிறகு வேறு ஒருவருக்கு வாழ்க்கை கொடுப்பதை விடச் சிறந்த பரிசு இந்த உலகத்தில் எதுமே கிடையாது’ என்று நடிகர் ரிதேஷ் ஆர்கன் டொனேஷன் குறித்து பேசியிருந்தார். சினிமாவிலிருந்து விலகியிருந்த நடிகை ஜெனிலியா தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கிறார்.


