இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி!

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை முதல் முறையாக வீழ்த்தி அயர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

இதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடி லார்கன் டக்கர் 50 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 ஓவர்களில் 148 ரன்கள் மட்டுமே ஆல் அவுட்டானது. இதன்மூலம், அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *