Odisha Road Accident: 8 பேர் உடல் நசுங்கி பலி!

Advertisements

ஒடிசாவில் கனரக  லாரியின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சர் மாவட்டம் காடகன் பகுதியில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புதுறையினருக்கும் ததகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 8 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கோவிலுக்கு, இரண்டு குடும்பத்தை சேர்ந்த 20 பேர் வேனில் பயணம் செய்த போது பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *