Actor Daniel Balaji Rip: மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் விருப்பப்படி அவரது கண்கள் தானம்!

Advertisements

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், விருப்பப்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. ‘காக்க காக்க’ படத்தில் வில்லனாக நடித்துத் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் டேனியல் பாலாஜி (வயது 48). தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில் எனப் பல ஹிட் படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தயிருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த டேனியல் பாலாஜியின் உடல் அஞ்சலிக்காகச் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு அவரது உடலுக்குத் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக நடிகர் டேனியல் பாலாஜி தனது கண்களைத் தானம் செய்திருந்தார். கீழ்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கே சென்ற மருத்துவர்கள் கண்களைத் தானம் பெற்றனர். இதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில் ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில் டேனியலின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *