எஃகு கோட்டையாக இருப்பதால், அதனை யாராலும் தகர்க்க முடியாது – செல்வப் பெருந்தகை

தி.மு.க. கூட்டணி எக்கு கோட்டையாக இருப்பதால், அதனை யாராலும் தகர்க்க முடியாது என்று குடியாத்தத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் பொது கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை வருகை தந்தார். முன்னதாக செய்தியளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, தி.மு.க. கூட்டணி மண் கோட்டை அல்ல, அது எக்கு கோட்டை எனவும், யாராலும் தகர்க்க முடியாது உறுதியான கூட்டணி எனவும், மன்னராட்சி முடிந்து பல காலங்கள் ஆகிவிட்டது எனவும், முடி ஆட்சி சென்று, தற்போது குடியாட்சி வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும்,  எடப்பாடி பழனிச்சாமி இன்னும் மன்னராட்சியிலிருந்து,  மீண்டு வரவில்லை, தன்னை ஒரு மன்னராகவும், அமித்ஷாவை பேரரசராகவும், எடப்பாடி பழனிசாமி நினைத்துக் கொண்டுள்ளார் எனவும், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க.வோடு, அ.தி.மு.க. கூட்டு சேர்ந்திருப்பதால்,  மக்கள் அ.தி.மு.க.வை நிராகரித்துள்ளனர் எனவும் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

பேட்டியின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சீரமைப்பு மேலாண்மை குழுத் தலைவர்  பீட்டர் அல்போன்ஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *