Trichy : அரசு பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது!

திருச்சி மாவட்டம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில், 30 இலட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதைப் பாஜக தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் கூட, திமுக ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை என்றும் திமுக நிர்வாகிகள் பணம் சம்பாதிக்க, நமது குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பள்ளிக் கட்டிடங்கள் கட்டிய ஒப்பந்தக்காரர் யார்? எந்த அடிப்படையில் அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? இடிந்து விழும் பள்ளிக் கட்டிடங்கள் கட்டிய ஒப்பந்தக்காரர்கள் மீது, இதுவரை திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்றெல்லாம் அண்ணாமலை வினாக்களை எழுப்பியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, இவை அனைத்துக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *