அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு.!

Advertisements

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் மீது சாட்டப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி எம். ராஜலட்சுமி, ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ஞானசேகரன் மீது குற்றம் சுமத்தப்பட்ட 11 பிரிவுகளிலும் அரசுத் தரப்பு வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஞானசேகரன் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார், தனது குடும்பம் தன்னை நம்பியுள்ளது என்று தெரிவித்தார். இதற்கு அரசுத் தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டுமெனக் கோரப்பட்டது,” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *